Latestமலேசியா

வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் நன்மை; மேம்படுத்தப்பட்ட Economic Fares Family பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்திய Batik Air

Batik Air விமான நிறுவனம் தனது ‘Economic Fares Family’ பயணத் திட்டத்தை, வங்காளதேசம், நேப்பாளம், பாகிஸ்தான்,Uzbekistan மற்றும் சவூதி அரேபியா தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துலக வழித்தடங்களுக்கு விரிவுப்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் ஆசியான் பயணிகளுக்கான தனது ‘Super Save’ சலுகைக் கட்டணத்தில் அண்மையில் ‘Zero Check-in Baggage’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  Batik Air  இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதலான பயணக் காலத்திற்கு, மே 15 முதல் தொடங்கும் டிக்கெட் முன்பதிவுகளுக்கு இது செல்லுபடியாகும்.

இம்முயற்சியானது, அனைத்துலகப் பயணிகளுக்கு அவர்களின் விருப்பங்களைப் பூர்த்திச் செய்யும் வகையிலான கட்டணத் தேர்வை வழங்கி, அதன் வாயிலாக, அவர்களுக்கு வசதிப்பட்ட மற்றும் சக்திக்குட்பட்ட விலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கட்டண மறுசீரமைப்பு, Economic Flexi Fare கட்டணத்தில் டிக்கெட்டை வாங்கும் பயணிகளுக்கு கூடுதல் நன்மையைக் கொடுக்கிறது – அதாவது கட்டண வித்தியாசத்துடன் இலவசமாக கட்டுப்பாடில்லா தேதி மாற்றத்தை மேற்கொள்ளும் வாய்ப்பை அவர்கள் பெறுவர்.

Batik Air-யின்  இந்தப் புதிய Economic Fares family பேக்கேஜ், தனது  பயணிகளுக்கு ஒட்டுமொத்தப் பயண அனுபவத்தை மேம்படுத்தும் அவ்விமான நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்துடன் ஒத்துப் போவதாக Batik Air தலைமை செயல் அதிகாரி டத்தோ Chandran Rama Muthy  தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் வாயிலாகவும், சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்வதன் மூலமும், வாடிக்கையாளர்களுக்கு தன்னிகரற்றச் சேவையை வழங்கும் கடப்பாட்டை Batik Air உறுதிச் செய்வதாக அவர் சொன்னார்.

Batik Air-ரின் கட்டண மறுசீரமைப்பு குறித்து மேல் தகவல்களுக்கு www.batikair.com அகப்பக்கத்தை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!