Latestமலேசியா

விசாக தினம் & மாமன்னர் பிறந்தநாளுக்கு பொது விடுமுறையை அறிவித்த புத்ராஜெயா – மனிதவள அமைச்சு

புத்ராஜெயா, மே-5-மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் மலேசியர்கள் நீண்ட வார இறுதி விடுமுறையை அனுபவிக்கவுள்ளனர்.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான விசாக தினம் மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது; அதனைத் தொடர்ந்து ஜூன் 1, திங்கட்கிழமை அன்று மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் பொது விடுமுறையாகும்.

மாமன்னரின் பிறந்தநாள் என்பது தனியார் துறையினருக்கு மாற்று விடுமுறை வழங்க முடியாத வகையில் கட்டாய ஊதியத்துடன் கூடிய விடுமுறை ஆகும்.

ஆனால், விசாக தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், பலருக்கு ஜூன் 2, செவ்வாய்க்கிழமை அன்று மாற்று விடுமுறை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மனிதவள அமைச்சு, ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாகக் கொண்டு, விசாக தினத்தை நிறுவன விடுமுறையாக அங்கீகரித்துள்ள முதலாளிகள், ஜூன் 2, செவ்வாய்க்கிழமையை மாற்று விடுமுறையாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தகுதியுள்ள பணியாளர்கள் வார இறுதியில் 4 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க வழி ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!