ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் வாழ்க்கை வரலாறு ‘Putin’ என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவரவுள்ளது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் தருணங்கள் உட்பட, அறுபது ஆண்டுகளாக Putinனின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் இந்த திரைப்படம் செப்டம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
போலந்து திரைப்படத் தயாரிப்பாளரான Besaleel இயக்கிய இந்தத் திரைப்படம் Putinனின் ஆளுமையைச் சுற்றியுள்ள மர்மங்களை வெளிக்கொணரும் ஒரு “psychological thriller” படமாகும்.
ஆங்கில மொழியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 35 நாடுகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.