ஈப்போ, ஆகஸ்ட்-20 – பேராக், ஈப்போவில் கடந்த வாரம் வீடுடைத்து சோற்றுப் பானை மற்றும் கரண்டியைத் திருடியதை ஒப்புக் கொண்ட இரு நண்பர்களுக்கு, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
43 வயது Muhamat Faizal Muhamat Darus, 41 வயது Mohd Ismail Mohd Abdul Aziz இருவருக்கும், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஈப்போ, தாமான் ராசா சாயாங்கில் உள்ள வீட்டொன்றை உடைத்து, வயர்கள் (wire), சோற்றுப் பானை, 3 சோற்றுக் கரண்டிகள் மற்றும் 2 இரும்புக் கம்பிகளைத் திருடியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கறிஞரை வைக்காத இருவரும் குறைந்தபட்ச தண்டனையை விதிக்குமாறு நீதிபதியிடம் முறையிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, குற்றவாளிகள் இருவரும் கைதான நாளிலிருந்து தண்டனை தொடங்குமென அறிவித்தார்.