Latestமலேசியா

வெட்டவெளி சற்குருவின் பேருரை, உபதேச நூல் வழங்கும் விழா; பொதுமக்களுக்கு அழைப்பு

பத்து கேவ்ஸ், அக்- 30 —வெட்டவெளி சற்குருவின் ஆன்மிகப் பேருரையும், அவரது உபதேச நூல் வழங்கும் விழாவும் நாளை அக்டோபர் 31, சனிக்கிழமை காலை 8 மணிக்கு பத்து கேவ்ஸில் நடைபெறவுள்ளன.

கதிர்காமத்தில் தாம் பெற்ற உபதேசத்தை மொழிகளைக் கடந்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பயணித்து வரும் சற்குரு, இந்நிகழ்வில் தமது ஆன்மிகப் பயணம் மற்றும் உபதேசங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

பத்து கேவ்ஸ், பத்து 7, ஜாலான் ஈப்போ பெக்கான் லாமா, PT.7 முகவரியில் அமைந்துள்ள Shenga Convention Hall அரங்கில் நடைபெறும் இவ்விழாவில், பேராசிரியர் டத்தோ டாக்டர் மு. சுவாமிநாதன் தலைமையுரையாற்றவுள்ளார்.

நுழைவு இலவசம் என்பதால், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!