Latestமலேசியா

வேப் புகையை உள்ளிழுக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண் கற்பழிப்பு; சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், செப்டம்பர்-30,வேப் புகையை உள்ளிழுக்க கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், தாம் கற்பழிக்கப்பட்டதாக 18 வயது இளம்பெண் ஒருவர் போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், பெட்டாலிங்கில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர் தம்மை வேப் புகையை உள்ளிழுக்க கட்டாயப்படுத்தியதாகவும், அதன் பின்னர் தாம் சுயநினைவை இழந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் Hoo Chang Hook கூறினார்.

சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு சுயநினைவு திரும்பியபோது, தாம் ஆடையின்றி இருந்ததுடன், அந்தரங்கப் பகுதியில் வலியை உணர்ந்ததாகவும், இதனால் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் எனவும் அந்தப் பெண் தனது புகாரில் சந்தேகம் தெரிவித்தார்.

எனினும், அப்பெண்ணுக்கு சந்தேக நபர் அறிமுகமானவரா இல்லையா என்ற விவரங்கள் இல்லை.

இந்நிலையில் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!