ஷா ஆலாம், ஏப்ரல்-30 – சிலாங்கூர், ஷா ஆலாமில் பேரங்காடி கழிவறையில் வைத்து நிறைமாத கர்ப்பிணியின் கைப்பையைத் திருடிய ஆடவன் கைதாகியுள்ளான்.
பிரசவத்திற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக நேற்றிரவு செக்ஷன் 23-ல் உள்ள அப்பேரங்காடிக்கு 37 வயது அப்பெண் தனியாகச் சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
கழிவறைக் கதவில் தான் மாட்டி வைத்திருந்த கைப்பையைக் காணாது அதிர்ச்சி அடைந்தவர், வெளியில் வந்து உதவிக் கோரி கூச்சலிட்டுள்ளார்.
அப்போது கைப்பையுடன் தலைத்தெறிக்க ஆடவன் ஓடுவதைக் கண்ட பொது மக்கள், அவனைத் துரத்திப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கைதான 22 வயது இளைஞன், ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பில் 4 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Assistant Commissioner Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
அவனை 3 நாட்கள் தடுத்து வைத்து, குற்றவியல் சட்டத்தின் 380-வது பிரிவின் கீழ் விசாரிக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டிருப்பதாகவும் Iqbal சொன்னார்.