ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
தெஹ்ரானில் நடந்தாகக் கூறப்படும் படுகொலைக்கு யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
அதற்கான விவரங்கள் எதுவும் வெளிவரவுமில்லை.
இதனிடையே, இஸ்ரேல் அதன் பிரச்சாரத்தில் 39,360 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது.
அதே வேளையில், 90,900 க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.
காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி,அதன் எண்ணிக்கை குடிமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதைக் காட்டுகிறது.