கோலாலம்பூர், நவம்பர்-23, பிரத்தியேக இணைய அகப்பக்கத்தில் தாங்கள் விரும்பும் ‘இணைகளைத்’ தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கோலாலம்பூர் ஜாலான் புடுவில் உள்ள ஹோட்டல் ஒன்று அறைகளை ஒதுக்கி வந்தது அம்பலமாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு Op Noda KL Strike Force என்ற பெயரில் போலீஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், அந்த ஒழுங்கீன நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அதில் விலைமாதர்கள் என நம்பப்படும் 5 இந்தோனீசியர்கள் உட்பட 7 வெளிநாட்டுப் பெண்கள் கைதாகினர்.
ஆணுறைகள் உட்பட பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விலைமாதர்களின் ‘சேவைக்கு’ கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் 250 ரிங்கிட் வசூலிக்கப்படுகிறது.
அதில் 120 ரிங்கிட்டை அப்பெண்களும், மீதி 130 ரிங்கிட்டை அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவோரும் பிரித்துக் கொள்கின்றனர்.
தினமும் நள்ளிரவு தொடங்கி விடியற்காலை 4 மணி வரை இந்த ஒழுங்கீனச் செயல் நடைபெற்று வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் கூறியது.