Latest

அடுத்த 2 ஆண்டுகளில் ஏவுகணை தயாரிப்பு நாடாக மாற மலேசியா இலக்கு – காலிட் தகவல்

கோலாலம்பூர், ஜூலை-2 – மலேசியா அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் நாடாக உருவெடுக்கும் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

 

எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை ஏவுகணை தயாரிப்பு வரை விரிவுபடுத்த நாடு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் முன்னிலையில், முன்னதாக மலேசியாவின் ‘Weststar Defence Industries மற்றும் ஆஸ்திரேலியாவின் RTI ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இதற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியின் மூலம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பப் பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மேம்படுத்தப்படும்.

 

மேலும், மலேசியாவில் இதற்கான பிரத்யேக உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படுவதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் மலேசியா இணையும்.

 

இது நாட்டின் தேசிய தற்காப்புத் துறை கொள்கையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அமைச்சர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!