Latestமலேசியா

அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகளைப் பதிவு செய்து, முதலிடத்திலிருக்கும் ஜோகூர் மாநிலம் – DOSM

ஜோகூர் பாரு, ஜூலை 1 – 2024 ஆம் ஆண்டில், அதிகமான உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, நாட்டின் சராசரி வளர்ச்சியான 5.1 சதவீதத்தைக் காட்டிலும் 6.4 சதவீதமாக உயர்வு கண்டுள்ளது என்று மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகமான உற்பத்தி வளர்ச்சிகளை கொண்டிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டில் 158 பில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று DOSM குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், 4.1 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த ஜோகூர் மாநிலம், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையை 148.6 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே பதிவு செய்துள்ளது.

மாநிலத்தில் தரவு மையங்களின் விரைவான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக உள்ளது, குறிப்பாக சேவைகள், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில்.

ஜோகூர் மாநிலத்தில் கட்டுமானத் துறை 42.7 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், உற்பத்தித் துறை 4.2 சதவீதமாகவும் மற்றும் விவசாயத்துறை 17.3 சதவீதமாகவும் உயர்வுக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!