
ஷா ஆலாம், ஜூலை-27 – ஷா ஆலாம் அருகே, DASH நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தடம்புரண்டு 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
23 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற Yamaha YZF-R15 மோட்டார் சைக்கிள், மேம்பால வளைவில் கட்டுப்பாட்டை இழந்து Persiaran Pulau Angsa சாலையின் புல்தரையில் விழுந்தது.
அதில் தலையிலும் கார்களிலும் படுகாயமடைந்து அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது Kampung Melayu Subang-கில் உள்ள வீட்டிலிருந்து கோலாலம்பூரில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறைக்குச் சென்றுக் கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.