
தெலுக் இந்தான், பிப்ரவரி-17 – பேராக், தெலுக் இந்தானில் காரொன்றை வேண்டுமென்றே 2 முறை மோதிய பிக் அப் லாரி ஓட்டுநரை போலீஸ் தேடி வருகிறது.
சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளோம்; அவர் 42 வயது ஆடவர் என ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் அஹ்மாட் அட்னான் பஸ்ரி (Ahmad Adnan Basri) கூறினார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட நபரான 30 வயது காரோட்டுநர் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்தார்.
Ford Ranger pickup லாரி தனது Honda Civic காரை 2 முறை வேண்டுமென்றே இடித்ததாக அவர் புகார் கூறியிருந்தார்.
53 வினாடி நீளம் கொண்ட சம்பவ வீடியோவும் வைரலாகியிருந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினரிடையே நடைபெற்ற வணிகம் தொடர்பாக பெறப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முதியவர் ஒருவர் அக்டோபர் 22 ஆம் தேதி அளித்த போலீஸ் புகாருடன், இச்சம்பவம் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாக அட்னான் கூறினார்.
முதியவருக்கு ட்ரோன் மூலம் அனுப்பப்பட்ட குறிப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அவரும், இப்போது பாதிக்கப்பட்ட ஆடவரும் வணிகப் பங்காளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.