
தெஹ்ரான், ஆகஸ்ட்-31,ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாராக் தீவில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளன.
அந்த முக்கிய வர்த்தகப் பாதையில் கடல் கண்ணிவெடிகளை சுமந்து செல்லும் ஏவுகணைகளை வீச ஈரான் புரட்சிகரப் படை தயாரானதை அடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ஈரான் புரட்சிகரப் படை, இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு கடுமையான பதிலடியும் தண்டனையும் அளிக்கப்படும் எனவும் அது எச்சரித்தது.



