Latestமலேசியா

ஷா ஆலாமில் பாதசாரி பலி – மோதிவிட்டு தப்பிய வாகனத்தை தேடும் போலீஸ்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், ஷா ஆலாமில் பாதசாரி ஒருவர் உயிரிழக்க காரணமான வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாமான் ஸ்ரீ மூடாவிலிருந்து கிள்ளான் நோக்கிச் செல்லும் ஜாலான் புக்கிட் கெமுனிங் சாலையில், நேற்று காலை சுமார் 8.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

45 வயது வங்காளதேச ஆடவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்தில் தலையிலும் கால்களிலும் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உடல் சவப் பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

விபத்தில் தொடர்புடைய வாகனம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அதன் ஓட்டுநரை கண்டறியும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான தகவல் அறிந்தவர்கள் போலீஸாரை தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!