Latestஉலகம்மலேசியா

தீவிர தேடுதல்: நேப்பாளம், சீனா வெள்ளப் பெருக்கில் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை – விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, ஆகஸ்ட்-31,நேப்பாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மொத்தம் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

​விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேப்பாளத்தில் 55 மலேசியர்களையும், சீனாவில் 36 மலேசியர்களையும் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதில் சீனாவில் உள்ள கீரோங் துறைமுகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 3 மலேசியர்களும் அடங்குவர்.

இதையடுத்து ​காட்மண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகங்கள் மூலம் இருநாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மோசமான இயற்கைப் பேரிடரில் நேப்பாளத்தில் மட்டும் இதுவரை 788 பேர் உயிரிந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் உட்பட 2,742 பேரை இன்னமும் காணவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!