Latestமலேசியா

அரசியலில் இனத்தையும் மதத்தையும் பயன்படுத்த வேண்டாம்; சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர்-26,அரசியல் ஆதாயத்திற்காக இனத்தையும் மதத்தையும் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​சிலாங்கூர் அரியணையில் அமர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பெர்னாமா நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்களின் நலன், பொருளாதார வளர்ச்சி மற்றும் இன ஒற்றுமைக்கே அரசியல் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆக்கப்பூர்வமற்ற அரசியல் நடவடிக்கைகளால் தாம் சலிப்படைந்துள்ளதாகவும், இன-மத உணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதால் அரசியல்வாதிகள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

​இதனிடையே, தாபோங் ஹஜி நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் சுல்தான் ஷராஃபுடின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மத நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிர்வகிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!