
அலோர் ஸ்டார், மே 19 – கெப்பாளா பாத்தாஸ் (Kepala Batas) பகுதியில் காருக்குள் கழுத்தில் குத்தப்பட்ட பெண், சுமார் 10 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று குறிப்பிட்டார்.
மேலும் அப்பெண் கூடுதல் ஓய்வெடுக்க வேண்டுமென்பதற்காக மருத்துவர்கள் இன்னும் தூக்க நிலையில் அவரை வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திதி காஜா (Titi Gajah) பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பு நடந்தது. பெண்ணை நன்கு அறிந்த 32 வயதுடைய ஆடவன், காருக்குள் அவரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய சந்தேக ஆடவன், பின்னர் தாமான் ஊடா (Taman Uda) பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மறைந்திருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டான் .



