Latestமலேசியா

ஆடவரின் 10 ஆண்டு கால சட்டப் போராட்டம் வெற்றி; MyKad-டில் ‘இஸ்லாம்’ என்ற வார்த்தையை அகற்ற உத்தரவு

கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-17, MyKad அட்டையில் தனது மதம் ‘இஸ்லாம்’ எனக் குறிப்பிடப்பட்டதை எதிர்த்து பத்தாண்டு காலம் நடத்திய சட்டப் போராட்டத்தில், சபாவைச் சேர்ந்த 28 வயது ஆடவர் கடைசியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

Rieno Glant Oleant George எனும் அவ்வாடவர் முஸ்லீம் அல்ல என அறிவித்த கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றம், அவரின் அடையாள அட்டையில் நடந்துள்ள தவற்றை சரி செய்யுமாறு தேசியப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டவரான George, 12 வயதில் MyKad தன் கைக்கு வந்த போது அத்தவற்றை கண்டுபிடித்தார்.

George பிறந்த ஓராண்டிலேயே அவரது பெற்றோர் இஸ்லாத்துக்கு மதம் மாறியதே அந்த MyKad குழப்பத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

MyKad-டில் நடந்த தவற்றை சரி செய்ய George பத்தாண்டுகளாக பதிவிலாகாவுக்கு நடையாய் நடந்தும் பயனில்லாமல் போனது.

ஷாரியா நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே அதனை மாற்ற முடியுமென பதிவிலாகா அறிவித்து விட்டது.

ஆனால், தான் எக்காலத்திலும் முஸ்லீமாக வாழாத போது ஷாரியா நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகிய George தற்போது அதில் வெற்றிப் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!