உலு லங்காட், ஏப் 22 – Gunung Nuang மலையேறியபோது Lolo முகாமிலுள்ள ஆற்றில் விழுந்த மலையேறி ஒருவர் மரணம் அடைந்தார். ஆற்றில் விழுந்த 17 மணி நேரத்திற்குப் பின் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் 36 வயதுடைய அந்த மலையேறியின் சடலம் நண்பகல் ஒரு மணியளவில் மீட்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி இயக்குனர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
அந்த சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 8.11 அளவில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டபோதிலும் இருளாக இருந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்ட பின் இன்று காலை மணி 10.15அளவில் மீண்டும் தொடங்கியதாக Ahmad Muklis கூறினார்.