Latestமலேசியா

இணைய பகடிவதைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் – டி.எஸ்.கே டத்தோ சிவக்குவார் அறைகூவல்

கோலாலம்பூர், ஜூலை 14 – வன்முறை, ஆபாசமாக வசைபாடுவது , அல்லது நாகரீகமற்ற வகையில் திட்டித் தீர்க்கும் கலச்சாரத்திற்கு மிரட்டலாக உருவெடுத்துள்ள இணைய பகடிவதை விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என DSK சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இணைய பகடிவதை போக்கு மனித நுண்ணறிவு மற்றும் AI வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.

சிறிதுகூட நாகரீகம் இல்லாமல் மற்றவர்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக திட்டி வசைபாடும் செயல் அண்மைய காலமாக இணைய பகடி வதை கலாச்சாராமாக வளர்ந்துள்ளதோடு அண்மையில் ஒருவரின் உயிரை பறிக்கும் அளவுக்கு இது மாறிவிட்டது கவலையை அளிக்கிறது.

டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் மோசமாக தரம் தாழ்ந்து மற்றவர்களை விமர்சிப்பதும் ,வசைபாடும் போக்கும் கண்டிக்கத்தக்கதாகும்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக திட்டப்படுவதை கண்டறிந்து அவற்றை தனிக்கை செய்யும் அளவுக்கு AI கண்டுப்பிடிப்பு இருக்க வேண்டும் .

பகடிவதையை பயன்படுத்தி மற்றவர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களை அடையாளம் காண்பதற்கும் AI தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படும் வகையில் அதனை மேம்படுத்த வேண்டும்.

இந்தச் சரிபார்ப்பை ஒன்று அல்லது இரண்டு மொழிகளில் மட்டும் வரையறுக்காமல் மலேசியாவில் பயன்படுத்தும் அனைத்து மொழிகளிலும் தணிக்கை முறையை விரிவுபடுத்தினால் அது மேலும் பயனாக இருக்க முடியும் என சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

ஒருவர் தங்கள் ‘நேரடி’ பதிவேற்றத்தின்போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தினால் எச்சரிக்கை செய்யக்கூடிய அம்சங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அதன் செயல்பாடு இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

டிக் டோக்கில் பல முறை புகார் செய்தும் அதன் போலி கணக்குகளைத் தடுக்க முடியவில்லை.

அதற்கான நடவடிக்கையில் இணைய தொழிற்நுட்ப நிபுணர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டால் இணைய பகடிவதை பிரச்சனைக்கு முடிவு கட்டமுடியும் என சிவக்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!