Latestஉலகம்

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் அடர்ந்த புகைமூட்டத்தைக் குறைக்க உலர் பனி தூவும் சோதனை

ஜகார்த்தா, அக்டோபர்-16,இந்தோனேசியாவில் காட்டுத் தீ புகையை விரட்ட உலர் பனிப்பொழிவு (Dry Ice) பரிசோதனை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

தென் சுமத்ரா மாநிலத்தில் காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட மோசமான புகைமூட்டத்தை அகற்ற, இந்தோனேசிய அரசு முதன்முறையாக இந்த உலர் பனிப்பொழிவு முறையைப் பரிசோதித்துள்ளது.

​பலேம்பாங் விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின் போது, இரண்டு விமானங்கள் மூலம் 1,600 கிலோ கிராம் உலர் பனி வளிமண்டலத்தில் தூவப்பட்டது.

​வழக்கமான மேகமூட்ட மேகங்கள் தேவையில்லாமல், தாழ்வான வளிமண்டலத்தில் தேங்கி நிற்கும் புகைக் கூரையை உடைத்து, அது மேலே சென்று கலைந்து போகச் செய்வதே இந்த நவீன நுட்பத்தின் நோக்கமாகும்.

​இதன் தொடக்கக் கட்ட சோதனையில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பார்வை தூர அளவு (Visibility) வெறும் 650 மீட்டரிலிருந்து 2,800 மீட்டராக உயர்ந்ததாக இந்தோனேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

​இந்தச் சோதனை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வரை தொடரும் என்றும், இதன் முடிவுகள் ஆராயப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!