Latestமலேசியா

செனாவாங்கில் லாரி மோதிய விபத்தில் JPJ அதிகாரி பலி; மற்றொருவர் படுகாயம்

சிரம்பான், அக்டோபர்-16,நெகிரி செம்பிலான், சிரம்பானில், சாலைப் போக்குவரத்து இலாகா அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.மற்றொருவர் படுகாயமடைந்தார்.

நேற்றிரவு சுமார் 10.50 மணியளவில், PLUS நெடுஞ்சாலையில், செனாவாங்கிலிருந்து வெளியேறும் சாலைக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தின்போது, அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றை JPJ அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, பின்னால் வந்த மற்றொரு லாரி கட்டுப்பாட்டை இழந்து, JPJ-வுக்குச் சொந்தமான SUV வாகனத்தையும், சோதனைக்குட்படுத்தப்பட்ட லாரியையும் மோதியதாக நம்பப்படுகிறது.

இதில் JPJ அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை நெகிரி செம்பிலான் JPJ உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!