Latestமலேசியா

இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய அறுவர் கைது

சிலாங்கூர், அக்டோபர் 23 – சிலாங்கூர், குவாலா லங்காட், தஞ்சோங் செப்பாட்டில் இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவரைத் துன்புறுத்திய ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாளியின் பொருட்களைத் திருடியதாகவும், அவருக்குச் சொந்தமான பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அந்தப் பணிப்பெண் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடலின் பல பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் (Datuk Shazeli Kahar) தெரிவித்தார்.

அக்டோபர் 16ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் பினாங்கு, பட்டர்வொர்த் பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பணிப்பெண்ணின் முதலாளிகளான கணவன், மனைவியும் அடங்குவர். அவர்கள் இருவரும் மேல் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!