Latestமலேசியா

இரு ரகசியக் கும்பல்களின் மோதல்: 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

மூவார், ஜூலை 31 – இரு ரகசியக் கும்பல்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் தொடர்பாக, சொத்துச் சேதம், வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்துதல் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் எட்டு பேர் இன்று மூவார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான ஏழு பேரில் 17 வயது சிறுவனும் உள்ளடங்குகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மூவருக்கு தலா 7,300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மற்ற மூவருக்கு தலா 4,500 ரிங்கிட், சிறுவனுக்கு 2,500 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் 23 வயது நபர் ஒருவர், அரிவாளால் தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 8,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!