Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: ‘ஒருவரையொருவர் மன்னித்து மீண்டும் நண்பர்களாவோம்’ – பிரதமர் அன்வார்  

கோலாலம்பூர், ஜூலை.31- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரக் காலம் நெடுகிலும், வாக்காளர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, மாநில நிர்வாகம் தொடர்வதையும் நிலைத்தன்மையையும் பேண ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரச்சாரக் காலத்தில் வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அதே சமயம் போட்டியிடும் கட்சிகளால் தவறுகள் அல்லது வரம்பு மீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மலேசியர்களாக நாம் அனைவரும் ஒருவரையொருவர் மன்னித்து நட்பை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என முகநூலில் வெளியிட்ட காணொளியில் அன்வார் வலியுறுத்தினார்.

இவ்வேளையில், இனம் மற்றும் மதம் பாராது நெகிரி செம்பிலான் மக்கள் அனைவரும் நாளை வாக்காளர்களாகத் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் ஆதரவு மீண்டும் கிடைத்தால், மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதையும், நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் PH தொடரும் என பி.கே.ஆர் (PKR) கட்சியின் தலைவருமான அன்வார் உறுதியளித்தார்.

16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் நாளை நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 8,89,940 வாக்காளர்களில் 8,59,750 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!