
புத்ராஜெயா, ஜூலை.31- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், பணம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் நேற்று வரை நான்கு புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
அப்புகார்கள் ஊழல் தொடர்புடையவையா அல்லது தேர்தல் விதிமீறல்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் Datuk Sri Abdul Halim Aman கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் ஊடக மையத்திற்கு வருகை தந்த காவல்துறை அதிகாரிகள் சிலர், தலா 300 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரை பெற்றதாக Chegubard என பரவலாகப் அறியப்படும் Wawasan கட்சி ஒருங்கிணைப்பாளர் Badrul Hisham Shaharin கூறியிருந்ததைத் தொடர்ந்து அப்புகார்கள் கிடைத்துள்ளன.
அதனை அடுத்து, அச்சம்பவம் தொடர்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டால் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Alzafny Ahmad கூறியிருந்தார். அத்தகைய முறைகேடு தொடர்பான புகார்கள் MACC-யிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



