Latestமலேசியா

ஒரு டன்னுக்கும் அதிகமான Musang King, Monthong வகை டுரியான் பழங்களைக் கடத்துவதற்காக 100 ரிங்கிட் ஊதியம்

கோத்தா பாரு, ஜூலை.31- கிளந்தான், Rantau Panjang அருகே Kampung Lubok Gongங்கில் சுமார் 26,250 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு டன்னுக்கும் அதிகமான Musang King மற்றும் Monthong வகை டுரியான் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது நடவடிக்கைப் படை மேற்கொண்ட Op Taring Wawasan Kelantan நடவடிக்கையின் போது, ​​44 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அதோடு சுமார் 20,000 ரிங்கிட் மதிப்புள்ள வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வேனைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 300 கிலோகிராம் Musang King, 750 கிலோகிராம் Monthong டுரியான் பழங்கள் அடங்கிய பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நபர் தாம் கொண்டுச் சென்ற டுரியான் பழங்களுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினார். அவை தாய்லாந்திலிருந்து பெறப்பட்டதாகவும், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தென்கிழக்கு பிரிகேட் தளபதி மூத்த உதவி ஆணையர் Ahmad Radzi Hussain தெரிவித்தார்.

விற்பனைக்காக கோத்தா பாரு கிராமப்புற உருமாற்ற மையத்திற்கு அப்பழங்கள் கொண்டு செல்லப்படவிருந்ததாகவும், அதற்காக அந்நபருக்கு 100 ரிங்கிட் ஊதியம் வழங்கப்படவிருந்ததாகவும் நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு ரந்தாவ் பாஞ்சாங் காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டன. மேல் நடவடிக்கைக்காக அவை கிளந்தான் மாநில விவசாயத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!