Latestமலேசியா

சிப்பாங் F1 Bahrain சர்வதேச கார் பந்தயப் போட்டி பகலில் நடைபெறும்

கோலாலம்பூர், ஜூலை 31 – வரும் அக்டோபர் 2 முதல் 4 வரை சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதையில் நடைபெறும் F1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் (Bahrain Grand Prix) அதாவது சர்வதேச கார் பந்தயப் போட்டி, பகல் நேரத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதையின் (SIC) தலைமைச் செயல் அதிகாரி அஸ்ஹான் ஷாஃப்ரிமான் ஹனிஃப் (Azhan Shafriman Hanif) உறுதிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் போட்டி இரவில் நடைபெறும் என்று தகவல் பரவியிருந்தது. ஆனால் அது தவறான தகவல் என்றும், போட்டி பகலிலேயே நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பஹ்ரைனில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் ரத்து செய்யப்பட்டிருந்த பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், இந்த ஆண்டு மலேசியாவின் செப்பாங் பகுதியில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!