Latestமலேசியா

பள்ளிகளில் பகடிவதையை ஒழிக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கல்வி அமைச்சுக்கு அன்வார் உத்தரவு

கோத்தா பாரு, நவம்பர்-1-பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், பகடிவதை, சிறார் துன்புறுத்தல் மற்றும் தற்கொலைச் சம்பவங்கள் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டியவை என அவர் வலியுறுத்தினார்.

கல்வியில் சிறந்து விளங்குவது மட்டும் போதாது; மாணவர்களிடையே ஒழுக்கம், மரியாதை மற்றும் பொறுப்புணர்வையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

பிறரைப் பகடிவதை செய்வதும் அவமானப்படுத்துவதும் கல்வி முறையில் நற்பண்புகளை வளர்ப்பதில் இன்னும் குறைபாடுகள் இருப்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சம்பவங்களைத் தடுக்க ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நேற்று கிளந்தான், கோத்தா பாருவில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!