Latestஇந்தியாஉலகம்

இந்து மத நம்பிக்கைகளையும் பசு வழிபாட்டு மரபையும் கேலி செய்த யூத மதகுரு; இந்தியா, இஸ்ரேலில் கடும் கண்டனம்

புதுடெல்லி, நவம்பர்-1-இந்துக்களின் மத நம்பிக்கைகளையும் பசுக்களைப் புனிதமாகக் கருதும் பாரம்பரியத்தையும் கேலியும் கிண்டலும் செய்த இஸ்ரேலிய-அமெரிக்க யூத மதகுரு யோசி மிஸ்ராச்சிக்கு (Yossi Mizrachi) எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், இந்துக்கள் பசுவின் கோமியத்தைக் குடிப்பதாகவும், சிலர் தரையில் விழும் கோமியத்தை நக்குவதாகவும் அவர் இழிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவர்களையும் கேலி செய்த அவர், இந்தியர்களைப் போலத் தம்மைப் படைக்காததற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்துகள் இந்தியா மட்டுமின்றி இஸ்ரேலிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேலிய ஆய்வாளர் யெஷாயா ரோசன்மேன் (Yeshaya Rosenmen), இத்தகைய பேச்சுகள் அனைத்துலக அளவில் இஸ்ரேலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி கண்டித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ் (Abdullah Ab Shawesh), எந்தவொரு மதத்தையும் அதன் பாரம்பரியத்தையும் அவமதிப்பது மனிதநேயத்திற்கே அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிஸ்ராச்சியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குச் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!