Latestமலேசியா

ஜோகூர் மூவாரில் தெருநாய் பிடிப்பு நடவடிக்கைக்குத் தடை; அமலாக்க அதிகாரியைத் தாக்கியதாகத் தாயும் மகளும் கைது

மூவார், நவம்பர்-1-ஜோகூர், மூவாரில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததோடு, நகராண்மைக் கழக அமுலாக்க அதிகாரியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் தாயும் மகளும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

52 வயது தாயும் 24 வயது மகளும் கடந்த வியாழக்கிழமை புக்கிட் பாசீரில் உள்ள அவர்களது வீட்டில் கைதுச் செய்யப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் Raiz Mukhliz Azman Aziz  தெரிவித்தார்.

தாமான் பிந்தாங் எமாஸ் குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 5.45 மணியளவில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அவ்விருவரும் அதிகாரிகளின் பணியைத் தடுத்து, பிடிக்கப்பட்ட நாயை விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கைகலப்பில், 45 வயது பெண் அமுலாக்க அதிகாரியின் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.

கைதான இருவரும் விசாரணைக்காக இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!