Latestஇந்தியாஉலகம்

12 ஆண்டுகளில் இந்தியாவில் 49.6 கோடி பேர் கடும் வறுமையிலிருந்து மீட்பு; வறுமை விகிதம் 2.6%-ஆகச் சரிவு – உலக வங்கி

புது டெல்லி, நவம்பர்-1-இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 496 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதன், அக்டோபர் 2026 வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, இந்தியாவில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் விகிதம், 2011-ஆம் ஆண்டில் இருந்த 27.1 விழுக்காட்டிலிருந்து, 2023-ஆம் ஆண்டில் 2.6 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

அதே காலக்கட்டத்தில், நாளொன்றுக்கு 4 டாலர் 20 காசுக்கும் குறைவான வருமான நிலைக்குரிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் விகிதமும் 57.7 விழுக்காட்டிலிருந்து 16.1 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

இந்த முன்னேற்றத்தை, உலகிலேயே மிக வேகமாக வறுமை குறைந்த நிகழ்வுகளில் ஒன்று என வருணித்த உலக வங்கி, இந்தியாவில் வருமான அடிப்படையிலான வறுமை மட்டுமின்றி, வருமானம் சாராத பிற வறுமைக் குறியீடுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, குறிப்பாகப் பெண்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி, உணவு மானியங்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூகநல உதவிகள் ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

என்றாலும், இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் இளைஞர்களிடையேயான வேலையில்லா திண்டாட்டமும் தொடர்ந்து சவாலாக இருப்பதை உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

இருந்தபோதிலும், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வறுமை விகிதம் மேலும் குறையும் என்றும் அது கணித்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!