Latestமலேசியா

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவரானார் குமராசன்; 26 ஆண்டு கால அனுபவத்திற்கு அங்கீகாரம்

ஜொகூர் பாரு, ஏப்ரல்-29, ஜொகூர் மாநில போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் முன்னாள் தலைவர் M. Kumarasan, இஸ்கண்டார் புத்ரி மாவட்டத்தின் போலீஸ் தலைவர் (OCPD) ஆகியுள்ளார்.

ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் அது நடப்புக்கு வந்துள்ளதற்கு ஏற்ப, அவர் உதவி ஆணையராகவும் (Assistant Commissioner) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

49 வயது Kumarasan-னின் அனுபவமும் தலைமைத்துவப் பண்பும், பதவி உயர்வுக்கு அவர் தகுதியானவர் என்பதை நிரூபிப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் M. Kumar கூறினார்.

Kumarasan-னின் தலைமைத்துவத்தின் கீழ் மாநில போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை, Ops Sikap சோதனை நடவடிக்கை உள்ளிட்டவற்றில் திறம்பட செயலாற்றியதாக, பதவி உயர்வு சடங்கில் குமார் பேசினார்.

26 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ள குமரேசன், கோலாலம்பூர், சபா, சிலாங்கூர் ஆகிய இடங்களில் பல்வேறுப் பொறுப்புகளை வகித்த பின் 2013-ஆம் ஆண்டு ஜொகூருக்கு மாற்றலாகி வந்தார்.

இவ்வேளையில் இதுவரை, இஸ்கண்டார் புத்ரியின் இடைக்கால OCPD-யாக இருந்த Supt Ibrahim Mat Som-மின் சேவைக்கும் கமிஷ்னர் குமார் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!