
தெஹ்ரான், மார்ச்-4-ஈரானில் உள்ள ஓர் இரகசிய நிலத்தடி அணு நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலத்தடி அணு ஆய்வு மையத்தை குறிவைத்து இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக,
இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
தாக்குதலுக்கு பிறகு வெளியான துணைக்கோளப் படங்களில் அந்த நிலையத்தின் சில முக்கியக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது தெரிகிறது.
அம்மையம், ஆயுதங்களுக்கான அணு தொழில்நுட்ப மேம்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஈரானின் அணு ஆற்றலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அம்மையம் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மாறி மாறி மேற்கொண்டு வருகின்றன.
என்றாலும், அனைத்துலக கண்காணிப்பு அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, தாக்குதல் நடந்த பகுதிகளில் இதுவரை கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.



