Latestஅமெரிக்கா

ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அமெரிக்கா திட்டம்: 5 முக்கிய துறைகளுக்குத் தடை

வாஷிங்டன், ஆகஸ்ட்-25-ஈரானின் அனைத்துப் பொருளாதார வழிகளையும் முற்றிலுமாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதோடு அந்நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என வாஷிங்டன் தெரிவித்துள்ளது.

​மத்தியக் கிழக்கில் போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஈரானின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாக அதன் கருவூலச் செயலாளர் Scott Bessent கூறினார்.

​ஈரானின் டிஜிட்டல் சொத்துகள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய 5 முக்கியத் துறைகளை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அதே சமயம்,​ஈரானுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எந்தவொரு அனைத்துலக வங்கியும் அமெரிக்க டாலர் கட்டமைப்புக்குள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

​ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்குமாறு உலக நாடுகளின் தலைவர்களிடமும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!