
டோஹா, மார்ச்-20-மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலக எண்ணெய் சந்தை ஆட்டம் கண்டுள்ளது….இது பழையச் செய்தி!
ஆனால், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் காரணமாக கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு, அதாவது LNG ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது…இது புது செய்தியாகும்.
உலகின் மிகப்பெரிய LNG எரிவாயு வழங்குநர்களில் ஒன்றான கட்டார்… தனது ஏற்றுமதி திறனில் சுமார் 17 விழுக்காட்டை இழந்துள்ளது.
இதனால் ஆண்டு வருமானத்தில் 20 பில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, QatarEnergy நிறுவனம் கூறியது.
இந்த வருமான இழப்பு மற்றும் எரிவாயு கட்டமைப்பு சேதாரங்களிலிருந்து மீட்சியடைய 3 முதல் 5 ஆண்டுகள் வரையாவது ஆகலாம் என அந்நிறுவனம் கணித்துள்ளது.
இது, ஐரோப்பிய நாடுகள், இந்தியா – சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான LNG விநியோகத்தை கடுமையாகாப் பாதிக்கும்.
குறிப்பாக ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எரிசக்தி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வை எதிர்நோக்குகின்றன.
இப்பாதிப்பு உலகளாவிய மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்…
மேலும், Hormuz நீரிணைப் போன்ற முக்கியக் கப்பல் போக்குவரத்து பாதைகளும் ஆபத்தில் இருப்பதால்… உலகளாவிய வழங்கல் சங்கிலி மேலும் சிக்கலடைய வாய்ப்புள்ளது.
இதனால் பல நாடுகள் மாற்று எரிசக்தி ஆதாரங்களை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.



