
வாஷிங்டன், செப்டம்பர்-21,ஈரான் மீதான போர் விவகாரத்தில் தாம் தற்போது இறுதிக்கட்ட முடிவெடுக்கும் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், விரைவில் மிகப்பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
Fox News செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், ஈரானை இராணுவ ரீதியாக முற்றிலும் அழிப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவது அல்லது ஓர் உடன்படிக்கையை எட்டுவது ஆகிய 3 தேர்வுகள் தமது பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், நியூ யோர்க்கில் நடைபெறவுள்ள ஐநா பொதுப் பேரவையின் போது, ஈரான் அதிபரைச் சந்தித்துப் பேச தாம் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் கோடி காட்டியுள்ளார்.
இதனிடையே, கடற்படை முற்றுகையை விலக்குவது, முடக்கப்பட்ட நிதி ஆதாரங்களை விடுவிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெஹ்ரான் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



