Latestமலேசியா

உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறை; அமைச்சர்களுக்கு அன்வார் ஒரு மாத காலக்கெடு

பட்டவொர்த், ஜூலை-25-மலேசியாவின் உணவு மற்றும் பானத்துறையை உலுக்கி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, அமைச்சரவைக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு மாத காலக்கெடு விதித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் இந்த அவகாசம் தொடங்குகிறது.

​பினாங்கு,
பட்டர்வொர்த்தில் நடைபெற்ற ‘இந்திய முஸ்லீம் உருமாற்றத் கட்டமைப்பு 2030’ தொடக்க விழாவில் பேசிய பிரதமர் அன்வார், உணவகத் துறை, குறிப்பாக இந்திய முஸ்லீம் உணவகங்கள் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

​இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் அரசாங்கம் “கதவுகளை முழுமையாகத் திறந்துவிடாது” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேசமயம், உணவகங்கள் போன்ற குறிப்பிட்ட முக்கிய துறைகளில் நிலவும் அவசரத் தேவையை பூர்த்திச் செய்ய வேண்டிய அவசியத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

​இதனைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அதிகபட்சமாக 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் காலக்கெடுவுக்குள் அமைச்சுகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!