ஈப்போ, ஏப்ரல் 26 – TasteAtlas சுற்றுலா வழிகாட்டி வெளியிட்டுள்ள, உலகின் 39 சிறந்த காப்பிகளின் பட்டியலில், “ஈப்போ வையிட் காப்பி” 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
TasteAtlas பார்வையாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், ஈப்போ வைட் காப்பி அந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக, ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ருமைசி பஹரின் கூறியுள்ளார்.
மார்ச் 15-ஆம் தேதி, TasteAtlas வெளியிட்ட பட்டியலில், ஈப்போ வைட் கோப்பி அந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதன் வாயிலாக, உலகின் மிகவும் பிரபலமான காபி தயாரிப்புகளில் ஒன்றாகவும் அது பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், கிரிசின் எஸ்பிரெசோ ப்ரெடோ (Espresso Freddo) முதல் இடத்தை பிடித்துள்ள வேளை ; கியூபாவின், கஃபே கியூபானோ (Café Cubano) இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
இந்தியாவின் ஃபில்டர் காபிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.