கோலாலம்பூர், மே 30 – Ulu Selangor , Bukit Sentosa -விலுள்ள Sri Kemboja அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மரம் விழுந்ததில் மூன்று கார்கள் சேதமடைந்தன. அச்சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 4.59க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து Bukit Sentosa தீயணைப்பு நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Sri Kemboja குடியிருப்பு பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு ஒரு Proton Wira மற்றும் இரண்டு Produa Myvi கார்கள் மீது மரம் விழுந்து கிடந்த போதிலும் அக்கார்களுக்குள் எவரும் இல்லை. இதனைத் தொடர்ந்து அந்த மரம் மற்றும் அதன் கிளைகள் விரைந்து அப்புறப்படுத்தப்பட்டதாக Selangor தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.