
உளு லங்காட் , செப்டம்பர்-23,
உலு லங்காட்டிலுள்ள (Hulu Langat) இடைநிலைப் பள்ளியில் இரண்டாவம் படிவம் பயிலும் தனது மகள் வகுப்புத் தோழனால் பகடிவதைக்கு உள்ளாகியிருப்பது குறித்து அம்மாணவியின் தாயாரான நூருல் அபிசா முகமது தர்மேடி ( Nurul Afeeza Mohd Tarmedi) பெரும் வேதனைக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பள்ளியில் இணைந்த இரண்டாவது நாளிலேயே தனது மகள் பகடிவதையின் பாதிப்புக்கு உள்ளானதாக தனித்து வாழும் தாயான Nurul Afeeza தெரிவித்துள்ளார்.
விசித்திரமான மற்றும் பயங்கரமான உயிரினங்களைப் போன்ற படங்களை மகள் வரைந்ததைத் தொடர்ந்து, அப்போதுதான் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது தாயாருக்கு.
மேலும் வகுப்பில் வேறு எந்த மாணவர்களும் இல்லாதபோது அவர் தனது கையை கூட வெட்டிக் கொண்டுள்ளதாக நூருல் விவரித்தார்.
என் மகள் பகடிவதைக்கு உள்ளானரா என்று எனக்குத் தெரியாது, அவள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை, அதே வேளையில் அவள் தன் அறையில் அடிக்கடி தனியாகவே இருந்து வந்துள்ளதால் பகடி வகைக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக நூருல் தெரிவித்தார்.
பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே தனது மகள் பகடி வதையினால் பாதிக்கப்பட்டதாகவும் இதுகூட அவரது சகோதரி கூறியபிறகே தெரியவந்திருக்கிறதாம்.
இதுகுறித்து பள்ளியின் கவுன்சிலிங் ஆசிரியர் மற்றும் கட்டொழுங்கு ஆசிரியரிடம் தெரிவித்தபோதிலும் தனது மகளுக்கு எதிரான பகடிவதை இன்னும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனால் தாம் பெரும் வேதனைக்கு உள்ளாகியிருப்பதாக நூருல் குறிப்பிட்டுள்ளார்.