Latestமலேசியா

எகிப்தில் புரோட்டோன் கார் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தார் பிரதமர் அன்வார்

கெய்ரோ, நவம்பர்-13 – Proton Holdings Bhd நிறுவனம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் வாகன உற்பத்தி மற்றும் உதிரிப் பாகங்களைப் பொருத்தும் தனது முதல் ஆலையை திறந்துள்ளது.

அடுத்த மாதம் தொடங்கி அங்கு CKD எனப்படும் முழுமையாகப் பிரிக்கப்பட்ட புரோட்டோன் சாகா கார்களின் உதிரிப் பாகங்களைப் பொருத்தும் பணிகள் தொடங்கும்.

இடது பக்கம் இயக்கும் (left hand drive) வசதி கொண்ட புரோட்டோன் கார்களுக்கு, வெளிநாடுகளில் அமைந்துள்ள முதல் CKD ஆலை இதுவாகும்.

அவ்வாலை, இவ்வாண்டு முதல் 2026 வரைக்குமான காலக்கட்டத்தில் எகிப்துக்கு 16,000 கார்களை ஏற்றுமதிச் செய்யும்.

இதன் மூலம் 570 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

உதிரிப் பாகங்கள் விற்பனையின் மூலம் தனியாக 20 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்ட முடியுமென, ஆலையைத் திறந்து வைத்து பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

புரோட்டோன் மலேசியாவின் பெருமையாகும்; ஐரோப்பிய நாடுகள் வரை பிரபலமான வர்த்தக முத்திரையாகுமென அவர் சொன்னார்.

இவ்வேளையில் எகிப்தில் காலூன்றியப் பிறகு அதன் அண்டை நாடுகளுக்கும் சிறகு விரிக்க இலக்குக் கொண்டிருப்பதாக புரோட்டோன் தலைவர் Syed Faisal Albar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!