Latestமலேசியா

எவரெஸ்ட் பனிப்பாறைகள் வேகமாக உருக மனிதச் சிறுநீரும் காரணம்

காட்மண்டு, செப்டம்பர்-5,எவரெஸ்ட் சிகரத்தின் ‘கும்பு’ பனிப்பாறை உருகுவதற்கு, மலையேறுபவர்களின் மனிதக் கழிவுகள் மற்றும் எரிபொருள் பயன்பாடும் முக்கியக் காரணம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

​Regional Environmental Change ஆய்விதழில் வெளியான தகவலின்படி, எவரெஸ்ட் அடிப்படை முகாமில் (base camp) தங்கும் ஆயிரக்கணக்கான மலையேறிகள் சமையல், வெப்பமூட்டல் மற்றும் மனிதச் சிறுநீர் கழித்தல் மூலம் வெளியிடும் வெப்ப ஆற்றல் ஆண்டுக்கு 2,492 டன் பனிப்பாறைகளை உருக்கும் திறன் கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது.

​கடந்த 32 ஆண்டுகால துணைக்கோள் தரவுகளின்படி, எவரெஸ்ட் அடிப்படை முகாமின் வெப்பநிலை ஆண்டுக்கு 0.28 பாகை செல்சியஸ் அதிகரித்து வருகிறது.

இது, சுற்றியுள்ள பனிப்பாறை பகுதிகளை விட 2 மடங்கு விரைவான வெப்பமயமாதலாகும்.

​இதனையடுத்து, தற்போது பனிப்பாறையின் மீது அமைந்துள்ள அடிப்படை முகாமை, தென்மேற்குப் பகுதியில் உள்ள பாதுகாப்பான தரைப்பகுதிக்கு மாற்ற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!