
ரோம், நவம்பர்-3,
இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர்.
Cima Vertana மலைச் சிகரத்தை அடையும் இலக்கோடு அக்குழுவின் நேற்று முன்தினம் பயணத்தைத் தொடங்கினர்.
சிகரத்தை நெருங்கும் தருவாயில் துரதிஷ்டவசமாக பனிச்சரிவு ஏற்பட்டதில், பாதுகாப்புக் கையிற்றுடன் கட்டப்பட்டிருந்த 2 குழுவினர் பிரிந்து, பனிக்கட்டிகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஒரு பெண் உட்பட மூவரின் சடலங்கள் சம்பவத்தன்றும், ஒரு தந்தை மற்றும் அவரின் 17 வயது மகளின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன.
மேலுமிரு மலையேறிகள் எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பினர்.



