Latestமலேசியா

ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கைத் தேவை – லிங்கேஷ்வரன் வலியுறுத்து

கோலாலாம்பூர், ஏப்ரல்-10-சுகாதார அமைச்சான KKM-மில் பணியாற்றும் 5,576 ஆதரவு பணியாளர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது.

இதனைத் தீர்க்க, அரசாங்கம் விரைந்து நிரந்தர பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென, பினாங்கு, சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக அரசாங்க பயிற்சி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.

இந்நடவடிக்கைகள் சுகாதாரத் துறையின் தொடர்ச்சியையும், பணியாளர்களின் நலனையும் பாதுகாக்க மிகவும் அவசியமாகும் என அறிக்கையொன்றில் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் நிலவரப்படி, மொத்தம் 27,481 ஒப்பந்த பணியாளர்கள் சுகாதார அமைச்சில் உள்ளனர்.

அவர்களில் இந்த 5,576 ஆதரவு பணியாளர்களில் மருத்துவ உதவியாளர்கள், சுற்றுச்சூழல் சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஆய்வூக் கூட தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட முக்கியப் பணியாளர்களும் அடங்குவர்.

இதில், 2,949 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் 953 சுற்றுச்சூழல் சுகாதார உதவியாளர்கள் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பணியாளர்களில் சுமார் 14 முதல் 15 விழுக்காட்டினர் இன்னும் நிரந்தர நியமனம் பெறவில்லை.

ஒப்பந்த பணியாளர்களை அதிகமாக சார்ந்திருப்பது சுகாதார சேவையின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும்.

தவிர, திறமையான பணியாளர்கள் தனியார் துறைக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லும் அபாயமும் உள்ளதாக லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!