Latestமலேசியா

ஒற்றுமை வாரக் கொண்டாட்டம்: ‘Rumah Kami’ பன்முகத் தன்மையின் பிரதிபலிப்பு

கோலாலாம்பூர், மே-9-மலேசியா மடானி கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஒற்றுமை வார விழாவின் முக்கிய ஈர்ப்பாக ‘Rumah Kami’ அதாவது ‘எங்கள் வீடு’ கண்காட்சி இடம்பெறுகிறது.

இந்த தனித்துவமான நிகழ்ச்சி, மலேசியாவின் பல்வேறு இனங்களின் பாரம்பரிய வீடுகள், கலாச்சாரம் மற்றும் கலைகளை ஒரே மேடையில் வெளிப்படுத்துகிறது.

இபான், கடசான் டுசுன், பிடாயூ, ஒராங் உலு, மெலானாவ் உள்ளிட்ட சமூகங்களின் பாரம்பரிய வீடுகள், உணவுகள், உடைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ‘Rumah Kami’-யில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்தக் கண்காட்சி, இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும், கலாச்சார வேறுபாடுகளை அறிந்து, ஒற்றுமையின் மதிப்பை உணர்த்தும் ஒரு உயிரோட்டமான மேடையாக திகழ்கிறது.

இது, சமூக எழுச்சியை வலுப்படுத்தி, மலேசியாவின் பன்முகத் தன்மையைக் கொண்டாடும் ஒரு முக்கிய முயற்சியாகும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!