
கோலாலம்பூர், ஜூன்-19-வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் மாற்றக்கூடிய _sunshades_ (removable sunshades) திரைகளைப் பயன்படுத்துவது தொடர்பான குழப்பங்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஓட்டுநரின் பார்வையை மறைக்காத வரை, மோட்டார் வாகனமோட்டிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்தோணி லோக், 1991 மோட்டார் வாகன விதிகளின்படி, நகரும் வாகனங்களில் sunshades திரைகளைப் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாகக் குற்றம் என்றாலும், அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சாலைப் போக்குவரத்து வாரியத்திற்கு (JPJ) எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
அரசாங்கத்தின் கவனம் தற்போது பொது மக்களின் உயிருக்கு நேரடியாக ஆபத்தை விளைவிக்கும் மற்ற முக்கியப் போக்குவரத்து விதிமீறல்கள் மீதே இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
_”பார்வைத்திறன் தொடர்பான _sunshades_ முக்கியமற்றவை என்று நான் கூறவில்லை. ஆனால், mat rempit சட்டவிரோத பந்தயங்கள், குடித்துவிட்டு வாகனமோட்டுதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனமோட்டுதல் போன்ற பெரிய குற்றங்களுடன் ஒப்பிடும்போது இது தற்போதை முன்னுரிமை அல்ல”_ என அவர் கூறினார்.
எனவே, பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் ஓட்டுநரின் பார்வையை மறைக்காத வண்ணம், வெப்பத்தைத் தணிக்கப் பொது மக்கள் வழக்கம் போல் இந்த _sunshades_ திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.



