Latestஉலகம்

கணவரின் புற்றுநோய் போராட்டம்: அமெரிக்க உளவுத்துறை முதன்மைத் தலைவர் துளசி கப்பார்ட் திடீர் ராஜினாமா

வாஷிங்டன், மே-23 – அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துள்சி கப்பார்ட் (Tulsi Gabbard), தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

​அவரது கணவர் Abraham Williams அரிய வகை எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு உறுதுணையாக இருக்கவே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக துள்சி தெரிவித்தார்.

​இது குறித்து அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இவ்வளவு பெரிய மற்றும் சவாலான பொறுப்பில் நீடித்துக்கொண்டு, கணவரை இந்த கடுமையான போராட்டத்தில் தனியாக விட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் அவர் தனது பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறார்.

​துள்சியின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட அதிபர் ட்ரம்ப், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டியதோடு, அவரது குடும்பத்திற்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பின், முதன்மைத் துணை இயக்குநர் Aaron Lukas தற்காலிக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துள்சி ஓர் இந்திய வம்சாவளி அல்ல என்றாலும், இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தாயார் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டதால் இவரும் இந்துவாகவே வாழ்ந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!