மணிலா, மே 16 – பிலிப்பைன்சில் கன்லான் ( Kanlaon ) எரிமலை இருக்கும் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆபத்து மண்டலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியை திங்கட்கிழமைக்குள் முடிக்கும்படி உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் தீவில் உள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மற்றும் நீக்ரோஸ் ஆக்சிடெண்டல் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கன்லான் எரிமலை டிசம்பர் 9 ஆம்தேதி குமுறியபோது , 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பலை கக்கியது. எரிமலைக்கு அருகே குடியிருக்கும் மக்களை விரைந்து வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு மேற்கு விசாயாஸ் வட்டாரத்தில் தற்காப்புத்துறை அலுவலகத்தின் இயக்குனர் ரவுல் பெர்னாண்டஸ் ( Raul Fernandez ) உத்தரவிட்டுள்ளார்.
எரிமலை செயல்பாடுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அபாயகரமான அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்க விரைவாக செயல்பட அதிகாரிகளைத் தூண்டும் நடவடிக்கையாக இது அமைந்தாலும் ஒரு சில குடியிருப்பாளர்கள் ர் ஆபத்து மண்டலத்தை விட்டு வெளியேற மறுக்கின்றனர். இன்னும் வெளியேறாத குடியிருப்பாளர்கள் புதிய வெடிப்பு அபாயத்தைத் தவிர்ப்பதற்காக உத்தரவுக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பெர்னாண்டஸ் கூறினார். பேரழிவு வெடிப்பு ஏற்பட்டால் உயிர்களைக் காப்பாற்றவும் துன்பத்தைக் குறைக்கவும் அரசாங்கம் ஒரு விரிவான வெளியேற்ற அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.